விமான நிலையத்துக்கு எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம்

காரைக்கால், ஜன. 8: காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் விவசாய நிலங்கள் நிறைந்த ஏராளமான கிராம விவசாய நிலங்களை அழித்து, தனியார் விமான நிலையம் அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு பல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்கள் விவசாய நிலங்களை தனியார் விமான நிலையத்திற்கு தாரை வார்க்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் தனியார் விமான நிலையத்திற்காக, காரைக்காலில் உள்ள ஒரு சில அரசியல் பிரமுகர்கள், விவசாயிகளை மிரட்டி விவசாய நிலங்களை தனியார் விமான நிலையத்திற்கு விற்கும்படி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.இது குறித்து, கிராம மக்கள் மற்றும் விவசாடிகள், தொகுதி எம்.எல்.ஏ சந்திரபிரியங்காவிடம் முறையிட்டனர். தொடர்ந்து, நெடுங்காடு தொகுதியில் விவசாயத்தை அழித்து தனியார் விமான நிலையம் தேவையில்லை. எனவே அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்களுடன் எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா கடந்த மாதம், மாவட்ட கலெக்டர் கேசவனிடம் புகார் மனு வழங்கினார். இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சிலர் விவசாயிகளை தொடர்ந்து மிரட்டுவதை கண்டிக்கும் வகையிலும், தனியார் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய

மாநில அரசை கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், கிராம மக்கள் தை பொங்கலை கருப்பு பொங்கலாக அறிவித்து, நேற்று வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கினர்.இந்த போராட்டத்தை சந்திர பிரியங்கா எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசுகையில், `விவசாய நிலங்களை அழித்து தனியார் விமான நிலையம் கொண்டு வருவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. எனவே மத்திய, மாநில அரசுகள் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றார்.

Related Stories: