‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பிளாஸ்டிக் போய் பாக்கு மட்டை பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திண்டுக்கல், ஜன. 3: பாதயாத்திரை பக்தர்கள் வருகை துவங்கி உள்ளதால் வழிநெடுகிலும் அமைந்துள்ள தற்காலிக கடைகளில் உணவுப்பொருட்களின் சுகாதாரத்தை உள்ளாட்சிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.பழநி தைப்பூசத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகினறனர். குறிப்பாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதற்காக இந்து சமயஅறநிலையம், போக்குவரத்து, மருத்துவம், காவல், தீயணைப்பு, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து சிறப்பு ஏற்பாடுகளை செய்வது வழக்கம்.இந்த ஆண்டு கடந்த சில நாட்களாகவே பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல்-பழநி, கொடைரோடு-செம்பட்டி, செம்பட்டி-ஒட்டன்சத்திரம், டசந்தூர்-ஒட்டன்சத்திரம், உடுமலை-பழநி, நத்தம்-திண்டுக்கல், தொப்பம்பட்டி-பழநி ஆகிய சாலைகளில் வந்து கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசியதாவது:பாதயாத்திரை பக்தர்களுக்காக திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை தனிப்பாதை அமைக்கப்பட்டு பேவள் பிளாக் சிமென்ட் சாலை உள்ளது. இதில் பழுதடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு முட்புதர்களை அகற்ற வேண்டும். ஒளிரும் பட்டைகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்த வேண்டும். பக்தர்களின் மணிக்கட்டில் ஒளிரும் பட்டைகள், மிளிரும் குச்சியை காவல்துறை வழங்க வேண்டும். இரவில் நடந்து செல்லும் பக்தர்களுக்காக டியூப்லைட் சாலையோரங்களில் அமைக்க வேண்டும். ஓய்வெடுக்கும் பகுதிகளில் தற்காலிக குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும். சாலையோர உணவகங்களில் பக்தர்களுக்காக தயாரிக்கும் ணவுப்பொருட்கள் சுகாதாரமாக உள்ளதா என்பதை உள்ளாட்சிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். விலைப்பட்டியல் அறிவிப்பு வைக்காத உணவகங்களுக்கு பழநி நகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்க ஆணையாளர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநி பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பறைகளை செப்பனிட்டு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். இதுகுறித்த அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே நிறுவ வேண்டும்’’ என்றார்.

இதில் எஸ்பி.சக்திவேல், டிஆர்ஓ.வேலு, சப்கலெக்டர் அருண்ராஜ், கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: