குன்னூர்,டிச.28: நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறந்த சுற்றுலா தலங்களாக சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ் ராக், பக்காசூரன் காட்சி முனை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் தோட்டகலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்ட மரங்கள் மற்றும் மலர்செடிகள் அதிகளவில் உள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண மலர்செடிகள் உள்ளன. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டு தோறும் மே மாத சீசனில் இரண்டு நாட்கள் பழக்கண்காட்சி நடைபெறும். ஆண்டுதோறும் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.