வீடியோ கான்பரன்சிங் மூலம் அமைச்சர் ஆலோசனை

புதுச்சேரி, டிச. 16: வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கில் 690 கி.மீ. தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திர மாநிலம் ஓங்கோல், காக்கிநாடா அருகே நாளை மதியம் கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ‘பெதாய்’ என பெயரிடப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் ஆந்திர மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏனாமில் பெதாய் புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இப்பணிகள் தொடர்பாக ஏனாம் மண்டல நிர்வாகி சுப்ரமணிஸ்வர ராவிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை செயலகத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி, பேரிடர் மேலாண் துறை இயக்குநர் பங்கஜ் குமார் ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: