பியோஜியோ வாடிக்கையாளருக்கு குலுக்கலில் ஸ்கூட்டர் பரிசு

புதுச்சேரி, டிச. 12: பியோஜியோ கம்பெனியின் 25 லட்சம் கமர்சியல் வாகனங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்தையை முன்னிட்டு உலகம் முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது. பியோஜியோவால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் இவ்விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதன்படி, இவ்விழா புதுச்சேரி நியூகார்ஸ் இந்தியா நிறுவனத்திலும் கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கோபி என்ற கோபாலகிருஷ்ணன், சஜிதா கோபாலகிருஷ்ணன், கே.ஜி.ராமகிருஷ்ண கவுண்டர், சரவணன், செல்வநாதன், கோகிலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

ஜூலை முதல் நவம்பர் 30 வரை வாகனங்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும், வாகனம் வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 25 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது. முதல் பரிசான எல்எம்எல் வெஸ்பா ஸ்கூட்டரை கோபி என்ற கோபாலகிருஷ்ணன், சஜிதா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். 2வது பரிசான பிரிட்ஜை ராமகிருஷ்ண கவுண்டரும், 3ம் பரிசு எல்இடி டிவியை ஜானி ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் ஷபி, 4வது பரிசு மிக்சியை ஓம் முருகா பேட்டரி கடை உரிமையாளர் கலையரசன், 5ம் பரிசு இன்டக்ஷன் ஸ்டவ்வை நியூகார்ஸ் இந்தியா பங்குதாரர் கோகிலா செல்வநாதன் வழங்கினர். 170 வாடிக்கையாளர்களுக்கு 25 கிராம் வெள்ளி நாணயத்தை நியூ கார்ஸ் இந்தியா சிஇஓ சரவணன், செல்வநாதன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் புவனேஷ்வரன், பாண்டியராஜன், மோகன்ராஜ், உதயன், வேல்முருகன், சந்தோஷ்குமார், வசந்தி இந்துஜா பைனான்ஸ் ரகு, இன்டசன் இன்ட் பாங்க் ராமநாதன், பார்சுன் பைனான்ஸ் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். அக்கவுண்டன்ட் தேன்மொழி நன்றி கூறினார்.

Related Stories: