புதுவை பல்கலையில் தேசிய கல்வி தினம்

புதுச்சேரி, டிச. 12: புதுவை பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை, சமூக அறிவியல், சர்வதேச கல்வி துறை மற்றும் கல்வி துறை ஆகியவை சார்பில் தேசிய கல்வி தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கி பேசும்போது, கல்வியின் மதிப்பை அங்கீகரித்து மதித்து உணர வேண்டும். இந்திய கல்வி முறை, உலகின் மிகச்சிறந்த கல்வி முறையாகும் என்றார். வரலாற்று துறை பேராசிரியர் சந்திரிகா வரவேற்றார். சமூக அறிவியல் மற்றும் சர்வதேச கல்வி புல டீன் வெங்கட்ட ரகோத்தம் கல்வி செயல்பாட்டில் ஆசிரியரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகள் மூலம் விவரித்தார்.

புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்குநர் ருத்ர கவுடு, உண்மையான கல்வி என்ன என்பதை விளக்கி, அனுபவத்தால் அது எப்படி தூண்டப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.   மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவை கவுரவிப்பதற்காக நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் வாசகம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியர் செல்லமணி நன்றி கூறினார்.

Related Stories: