கேர்கம்பை அரசு பள்ளியில் உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு

கோத்தகிரி, டிச.7: கோத்தகிரி அருேக கோ்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்புக்குழு சார்பில் உணவில் கலப்படம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைைமை தாங்கினார். கோத்தகிரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பீமன், பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் மாநில நுகர்வோர் அமைப்பின் துணைத் தலைவர் ராஜன் கலந்து கொண்டு உணவு பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்கள் குறித்து விளக்கி பேசினார்.    இதையடுத்து, உணவில் கலப்படம் செய்ய பயன்படும் பொருட்கள் குறித்த கண்காட்சி நடந்தது. பின்னர் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Related Stories: