எஸ்.பி.எம் ஜெய்டெக் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

உத்தமபாளையம், டிச.4: உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி எஸ்.பி.எம். ஜெய்டெக் இண்டர்நேசனல் சீனியர் செகண்டரி பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் ஜெகதீஸ், செயலாளர் கீதா தலைமை தாங்கினர். இப்பள்ளி மாணவர்கள் கம்பம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு நேரடியாக சென்று சுகாதாரக் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, சுகாதாரம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தனர்.

இதனை காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு டாக்டர் சிராஜூதீன், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், குமரேசன், கிருஷ்ணன் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதன்பின்பு கைகளை கழுவும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது எப்படி, உடல்பருமனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி டாக்டர் சிராஜூதீன் விளக்கினார்.  நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் களஆய்வு நடத்திய சுகாதாரம் பற்றிய செயல்விளக்க குறிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பள்ளி முதல்வர் உமாமகேஷ்வரி, மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக பார்வையிட்டனர்.

Related Stories: