ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆலங்குளம், நவ. 30:   ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் சாலை, நெடுஞ்சாலைத்துறையின் அம்பை உட்கோட்ட சேரன்மகாதேவி பிரிவு கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த சாலையில் ஆலங்குளம் பஸ் நிலையத்தில் இருந்து சாலையேரரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் உத்தரவிட்டார். இதையடுத்து முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை ஆர்ஐ ராமையா தலைமையில் ஆலங்குளம் கிராம உதவியாளர் சுப்பிரமணி மற்றும் ஊழியர்கள், அம்பை சாலையில் கடந்த செப்.19ம் தேதி அளவீடு பணிகளில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைக்குக்குட்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு குறியீடு போடப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 20 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக கடை முன்புள்ள ஆக்கிரமிப்பை அந்தந்த கடைக்காரர்கள் அகற்ற துவங்கினர்.  இந்நிலையில் நேற்று காலை அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றனர். இதையொட்டி இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நெல்லை - தென்காசி நான்குவழிச்சாலை பணிக்காக ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அம்பை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பணியால் சாைலயோர சிறுவியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பேரூராட்சி சார்பில் தனியிடம் ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories: