குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் மீது வழக்கு

திருச்சி,  நவ. 29: குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த  டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவான  இருவரையும் தேடி வருகின்றனர். திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர்  திலகர் தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகன் அப்புக்குட்டி(36). இவர்  வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக தில்லைநகரை சேர்ந்த ஒரு டிராவல்ஸ்  நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் பணம் கட்டினார். மேலும் இவரது மாமாவிற்கும்  வேலைக்காக ரூ.்50 ஆயிரம் பணம் கட்டினார். ஆனால் நீண்ட நாட்களாகியும்  இருவருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து விசாரிக்க சென்ற போது  டிராவல்ஸ் நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  அங்கு விசாரித்த போது நிறுவனத்தை காலி செய்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து  மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இவரை போல் கன்னியாகுமரி  மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தாங்களை ஏமாற்றியதாக புகார்  அளித்திருந்தனர்.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநகர  குற்றப்பிரிவிற்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நிறுவன  அதிபர் ஷாஜகான், மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் மீது வழக்குபதிந்து  இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரித்து வருகின்றார். மேலும் தலைமறைவான இருவரையும்  தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், கடந்த செப்டம்பர் மாதம் தான்  அங்கு டிராவல்ஸ் நிறுவனம் துவக்கி உள்ளனர். துவக்கிய 2 மாதத்திற்குள்  30க்கும்் மேற்பட்டோரிடம் ரூ.22லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.  தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: