சித்தரின் 101வது குருபூஜை விழா

அலங்காநல்லூர், நவ.29: அலங்காநல்லூர் 1வது வார்டு பகுதியில் சந்ததம் பால்சுவாமி சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத பூச நட்சத்திரத்தன்று ஜீவசமாதி தின குருபூஜை நடைபெறும். இந்த வருடம் 100 ஆண்டுகள் நிறைவடைந்து 101வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதற்காக சிறப்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. இந்த ஜீவசமாதியில் உள்ள சிவனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கொண்டல்சுவாமி உள்ளிட்ட சித்தரின் வாரிசுதாரர்கள் செய்திருந்தனர்.

Related Stories: