லால்குடி வட்டாரத்தில் ெஹலி கேமரா மூலம் சேதமான வாழை ஆய்வு

திருச்சி, நவ.23: லால்குடி வட்டாரத்தில் கஜாபுயலால் சேதமான வாழை பயிர்களை ஹெலிகேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

பயிர் கண்காணிப்பு, பயிர் காப்பீடு மதிப்பீட்டில் வேளாண் துறைக்கு வேளாண் பல்கலைக்கழகம் மிகவும் உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்கி வருகிறது. தேங்காய், வாழை மற்றும் நீரில் மூழ்கிய நெற்பயிரின் சேதங்களை மதிப்பீடு செய்ய வேளாண் பல்கலையிலிருந்து இரண்டு வகையான ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி கஜா புயலினால் ஏற்பட்ட வாழை சேதத்தை மதிப்பீடு செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்குமார், கோவை வேளாண் பல்கலைக்கழக தொலை உணர்வு மற்றும் புவிசார் தகவல் தொழில்நுட்ப துறைக்கு அறிவுறுத்தலின் பேரில் சேத மதிப்பை லால்குடி தாலுகாவில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தோட்டக்கலைத்துறை ஹெலிகேமரா மூலம் நிபுணர் குழுவுடன் இணைந்து லால்குடி வட்டாரத்தில் சாத்தமங்கலம், நன்னிமங்கலம், ஆனந்திமேடு ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இயற்கை பேரழிவால் ஏற்படும் பயிர்  சேதங்களை விரைவாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்ய ஹெலிகேமராவை   பயன்படுத்தலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்  ஆலோசனை கூறி உள்ளார். பேராசிரியர் பழனிவேலன் தலைமையில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) தனசேகர் உதவியாக இருந்தனர். மற்றும் முன்னோடி விவசாயிகள் ராஜகோபால், வீரசேகரன், நல்லேந்திரன் உடனிருந்தனர். இதில் 1,500 எக்டேரில் சேதமடைந்த வாழைத்தோட்டங்களை ஆய்வு செய்தனர்.

Related Stories: