கூட்டுறவு விழா ஓவிய போட்டி களக்காடு மாணவி வெற்றி

களக்காடு, நவ. 23:  கூட்டுறவு விழா ஓவியப் போட்டியில் களக்காடு மாணவி   வெற்றி பெற்றார். நெல்லையில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி நடந்தது. இதில் களக்காடு கே.ஏ.எம்.பி.மீரானியா மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு  மாணவர் முகம்மது தமீம் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்றார். அவருக்கு அமைச்சர் ராஜலட்சுமி பரிசு வழங்கினார். ஓவியப்போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவரை பள்ளி தாளாளர்  பீர்முகம்மது, தலைமை ஆசிரியர் யாகத் அலிகான், உதவி தலைமை ஆசிரியர்  நாகூர்மீரான், ஓவிய ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: