வைத்தீஸ்வரன்கோயிலில் சாய்ந்து விழும் அபாய நிலையில் உயர்கோபுர மின்விளக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சீர்காழி,நவ.22: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் சாய்ந்து விழும் அபாய நிலையில் உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பக்தர்களின் நலன் கருதி தெற்கு வீதியில் கடந்த ஆண்டு மயிலாடுதுறை எம்.பி., நிதியின் கீழ் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.  இந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பம் கடந்த சில நாட்களாக சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மின் கம்பம் சாய்ந்தால் அருகில் செல்லும் மின்சார கம்பியின் மீது விழும் அபாய நிலையில் உள்ளது.  இதனால் விபத்துக்கள் ஏற்படும் முன் உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: