வாலிபரிடம் வழிப்பறி செய்த 3 ஆசாமிகள் கைது

காரைக்கால், நவ. 20: காரைக்கால் மேலவாஞ்சூர் பகுதியில்,  நடந்து சென்ற வாலிபரிடம் வழிப்பறி செய்த, நாகை மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்களை திருமலைராயன்பட்டினம் போலீசார் கைது செய்தனர். காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அடுத்த மேலவாஞ்சூர் அருகே உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில், நாகூர் தெத்தி தெருவை சேர்ந்த ஆசைதம்பி (எ) முஜுபூர் ரஹ்மன் (31) என்பவர் 3 மது பாட்டில்களை வாங்கிகொண்டு நடந்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த, நாகை மாவட்டம் அந்தணபேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணகரன் (25) மற்றும் அவரது நண்பர்கள் சிராஜிதீன் (20) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆசைதம்பியை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கிருஷ்ணகரன் பட்டன் கத்தியால், ஆசைதம்பி துகு, கழுத்தில் கீறி, மிரட்டி, அவரிடமிருந்த மதுபாட்டில்கள், ரூ.200 பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

ஆசைதம்பியின் கூச்சலை கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். எஸ்.பி வம்சிதரரெட்டி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மரிகிரிஸ்டின்பால், சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் ஆசைதம்பியிடம் விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகரன் என்ற வாலிபர் குறித்த அடையாளங்களை கூறியதை அடுத்து போலீசார் கிருஷ்ணகரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது வழிப்பறி சம்பவத்தை ஒப்புகொண்டார். தொடர்ந்து அவர் கொடுத்த முகவரியில், மேற்கண்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில், ரூ.200 ரொக்கம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: