விவசாயி தற்கொலை

நெல்லை, நவ. 8: நெல்லை அருகே குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்தார். நெல்லை அருகே உள்ள கான்சாபுரம் நொச்சிகுளத்தை சேர்ந்தவர் பழனி (45). விவசாயி. குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு சர்வதேச விருது

நெல்லை, நவ. 7:  சிகாகோவில் அமெரிக்க கண் மருத்துவ கழக 2018 மாநாடு, கடந்த அக்.27 முதல் 30ம் தேதி வரை நடந்தது. இதில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தலைமை கண் மருத்துவ இயக்குநர் லயனல்ராஜிக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதிநவீன கதிர்வீச்சு மூலம் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறையின் சிறந்த ஆய்வுகளுக்கான 2018-ன் சர்வதேச கண் மருத்துவ கல்வியாளர் விருது வழங்கப்பட்டது.மாநாட்டில் டாக்டர் லயனல்ராஜ், அதிநவீன பெம்டோ கதிர்வீச்சின் மூலம் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளின் ஆராய்ச்சி ஆவணங்களை சமர்ப்பித்தார். இதில் வழக்கமான கூம்பு கருவிழி அறுவை சிகிச்சை முறைக்கும், அதிநவீன கூம்பு கருவிழி கதிர்வீச்சு சிகிச்சை முறைக்கும் இடையே உள்ள விளக்கத்தை ஆய்வின் மூலம் விளக்கினார். எண்டோதீலியல் கெரடோபிளாஸ்டி மற்றும் கருவிழியின் பின்பக்க நோய் தொற்றை குணப்படுத்தும் இம்பளான்ட் என்ற ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பித்தார்.

கருவிழியின் பின்பக்க நோய் தொற்றை குணப்படுத்தும் இம்பளான்ட் முறையை காணொளி மூலம் விளக்கினார். இது மாநாட்டின் சிறந்த காணொளியாக தேர்தெடுக்கப்பட்டு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த காணொளி, அமெரிக்க கண் மருத்துவக் கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.கடந்த 2 ஆண்டுகளில் டாக்டர் லயனல்ராஜிக்கு 9 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: