பொன்னாடை அணிவிப்பு சமயநல்லூர்-புதூரில் மின் குறைதீர் கூட்டம்

மதுரை, நவ.1: மதுரை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், அழகர்கோவில் ரோட்டில் உள்ள, கோ.புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. காலை 11 மணி முதல், பகல் 1 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிக்குளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர் மற்றும் மேலமடை பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின்நுகர்வு தொடர்பான குறைகளை நேரில் தெரிவிக்கலாம்,

என புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி ெதரிவித்துள்ளார். இதேபோல் சமயநல்லூர் கோட்டத்தை சார்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில், இக்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு, மின்நுகர்வு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

Related Stories: