சித்தூர் அரசு பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி

இடைப்பாடி, அக்.31:  இடைப்பாடி அருகே சித்தூர் அரசு பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி நடந்தது. இடைப்பாடி அருகே சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் மன்றத்தின் சார்பில், பழங்கால நாணய கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அருள்முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், ஆசிரியர்கள் ஜெயபாலகிருஷ்ணன், வினோத்குமார், ராஜேந்திரன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் இந்தியா, ரஷ்யா மற்றும் பாண்டியர், சேரர், சோழர்கள் பயன்படுத்திய நாணயங்கள் மற்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறந்த பழங்கால நாணயத்திற்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சமூக அறிவியல் ஆசிரியர் விக்ணேஷ்குமார் வரவேற்றார். சமூக அறிவியல் ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

Related Stories: