இடைப்பாடி வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி

இடைப்பாடி, ஜூன் 18: இடைப்பாடி தாலுகாவில் ஜமாபந்தி இன்று (18ம்தேதி) முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் முருகன் தலைமை வகிக்கிறார். இடைப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 25 வருவாய் கிராமங்களுக்கான ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.

இன்று பூலாம்பட்டி, பக்கநாடு, ஆடையூர், சித்தூர் பிட் எண்-1, சித்தூர் பிட் எண்- 2, நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி கிராமங்களுக்கும், 19ம்தேதி இடைப்பாடி, இருப்பாளி, செட்டிமாங்குறிச்சி, ஆவணி பேரூர் மேல்முகம், சின்னமணலி, ஆவணி பேரூர் கீழ்முகம், தாதாபுரம், வேம்பனேரி கிராமங்களுக்கும், 20ம் தேதி கொங்கணாபுரம், புதுப்பாளையம், சமுத்திரம், வெள்ளாளபுரம், கோணசமுத்திரம், கோரணம்பட்டி, கட்சுபள்ளி, எருமைப்பட்டி, குரும்பபட்டி, தங்காயூர் உள்ளிட்ட 25 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை அளித்து குறைகளை நிவர்த்தி கொள்ளலாம் என இடைப்பாடி தாசில்தார் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

The post இடைப்பாடி வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி appeared first on Dinakaran.

Related Stories: