சங்ககிரி, ஜூன் 15: நாகப்பட்டினம் மாவட்டம், கீவலூர் தாலுகா திருக்கண்ணங்குடியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(20), டேங்கர் லாரி டிரைவர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கிளீனர் வீரராகவன்(19) ஆகிய இருவரும், சென்னையிலிருந்து டேங்கர் லாரியில் தார் லோடு ஏற்றிக்கொண்டு, கடந்த 11ம் தேதி சங்ககிரி வந்தனர். அங்கு ஆவரங்கம்பாளையம் என்ற இடத்தில், தார் பிளாண்டில் இரவு 8.20 மணிக்கு லோடை இறக்கினர். பின்னர், லோடு முழுவதும் இறங்கி விட்டதா என்று பார்ப்பதற்கு, டிரைவர் விசுவநாதன், லாரி மீது மேலே ஏறியபோது, அங்கிருந்த மின்ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கியதில், கீழே விழுந்தார். மேலும் லாரியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த கிளீனர் வீரராகவனையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில சேர்த்தனர். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி டிரைவர் கிளீனர் படுகாயம் appeared first on Dinakaran.