நடுக்கல்லூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

நெல்லை, அக். 31:  நடுக்கல்லூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். நடுக்கல்லூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மழைக்காலத்தில் ஏற்படும் விஷ காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில், காய்ச்சல் வராமல் தடுப்பது, காய்ச்சல் வந்தால் மேற்கொள்ளப்படவேண்டிய உடனடி மருத்துவ சிகிச்சை, மருத்துவமனையை அணுகி உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய அவசியம், தொடர்ந்து காய்ச்சல் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் ரத்த பரிசோதனை செய்வது. மழைக்காலத்தில் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைப்பது, குடிநீரை காய்ச்சி பருகுவது உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்கள் மாணவிகளுக்குத் தெரிவிக்கப்பட்டன. டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து தலைமையாசிரியை மேரிமுத்துகுமாரி விரிவாகப் பேசினார். முகாமில் பங்கேற்ற அனைவரும் இதுதொடர்பாக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றதோடு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Related Stories: