திருநள்ளாறில் ஆக்கிரமிப்பு அகற்றம்

காரைக்கால், அக். 30: காரைக்கால் திருநள்ளாறு சாலையில், தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர், நகராட்சிக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான வடிகால் வாய்க்கால் மற்றும் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார். இதனால், மழை மற்றும் வெள்ள நீர் வடிவதில் சிக்கல் இருந்து வந்ததது. இதனால், ஆக்கிரமிப்பை உடனே அகற்றவேண்டும். என, பொதுமக்கள், மாவட்ட கலெக்டர், கவர்னர் மற்றும் முதல்வருக்கு புகார் அளித்தனர் அதன்பேரில், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு நகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. பல மாதங்கள் ஆகியும் அதற்கு முறையான விளக்கம் அளிக்காததால், நகராட்சி ஆணையர் சுபாஷ் போலீசார் பாதுகாப்புடன் நேற்று அதிரடியாக அகற்றினார்.

Related Stories: