முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன், தாசில்தார் சுப்ரமணியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முசிறி சிவாலயத்தில் அன்னாபிஷேகவிழா

தா.பேட்டை, அக்.25: முசிறி சந்திரமவுலீஸ்வரர் சிவாலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றது. கோயிலில் 50 கிலோ அன்னத்தினால் சிவலிங்கத்திருமேனி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது விவசாயம் செழிக்கவும், உலகில் பஞ்சம், பசி பட்டினி இன்றி சுபிட்சமாக வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதை தொடர்ந்து காவிரி ஆற்றில் மீன்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.

முசிறி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். கொடுத்ததை வாங்கி மீண்டும் வழங்கல்

தண்டலைப்புத்தூரில் நடைபெற்ற மனுநீதி முகாம் நிறைவு நாள் விழாவில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரெயின்கன் எனப்படும் மழை தெளிப்பான் கருவியை மீண்டும் எடுத்து வரச்செய்து அதனை விழா மேடையில் மீண்டும் அதே விவசாயிகளுக்கு வழங்கினர். இதுகுறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு முறையான பதில் கூறவில்லை. ஆனால் விவசாயிகள் தங்களுக்கு ஏற்கனவே வழங்கிய ரெயின் கன்னை எடுத்து வரச்செய்து அதனை மீண்டும் தங்களுக்கு வழங்கியதால் சலிப்படைந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற தவறுகள் நடக்காது என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 7 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories: