மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் 5 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

பெரம்பலூர்,அக்.23: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 5 பேர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. பெரம்பலூர் கலெக்டர்அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் ஓய்வூதியம், உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான மாற்றுத்திறனாளிகள் 27 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட  கலெக்டர்(பொ) அழகிரிசாமி மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் ரூ28,400 மதிப்புள்ள மூன்று சக்கர வண்டிகளை 4 நபர்களுக்கும், தேசிய அடையாள அட்டைகளை 5 நபர்களுக்கும் கலெக்டர்(பொ) அழகிரிசாமி வழங்கினார்.

Related Stories: