சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிவகாசி, அக்.18: சிவகாசியில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி நகராட்சியில் சொத்து வரி 150 முதல் 316 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குடிசைப் பகுதி நீக்கப்பட்டு, பிற பகுதிகளுடன் சேர்க்கப்பட்டும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, வரி உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். குடிசைப் பகுதிகளை நீக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

சிவகாசி நகராட்சி அலுவலகம் மன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நகர்குழு உறுப்பினர் பழனி தலைமையேற்றார். துவக்கி வைத்து முன்னாள் நகர் செயலாளர் மாடசாமி பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பேசினார். முடிவில் நகர் செயலாளர் முருகன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், சிஐடியு தலைவர் லாசர், முத்துராமன், விக்டர் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: