வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

வத்திராயிருப்பு, அக். 17:  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால், பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது. எனவே, பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன.  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பிளவக்கல் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி பெரியாறு அணையில் 24.4 மி.மீ, கோவிலாறு அணையில் 19.2 மி.மீ வத்திராயிருப்பில் 21.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 47.54 அடி உயரமுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 41.01 அடி. நீர்வரத்து வினாடிக்கு 66.75 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. 42.65 அடி உயரமுள்ள கோவிலாறு அணையின் நீர்மட்டம் 11.39 அடி. நீர்வரத்து இல்லை. பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயருவதால், அணையிலிருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்தால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்க வேண்டி வரும். எனவே, பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: