உலக கண் பார்வை தின விழிப்புணர்வு கூட்டம்

புதுச்சேரி, அக். 16:  தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம் சார்பில் உலக கண் பார்வை தினத்தையொட்டி விழிப்புணர்வு கூட்டம் லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. மருத்துவ அதிகாரி சாந்தி தலைமை தாங்கினார். மருத்துவர்கள் சிவப்பிரசன்னா, ஜீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் பாபு ஜெயகாந்தன் வரவேற்றார்.

 சிறப்பு விருந்தினராக தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்ட அதிகாரி தணிகாசலம் கலந்து கொண்டு பேசுகையில், ‘வயதானவர்களுக்கு கண்ணில் உள்ள லென்ஸ் கடினமாகி கண்புரை ஏற்படும். ஆனால், மாறிவிட்ட உணவு பழக்கம், சர்க்கரை நோய் காரணமாக தற்பொழுது 35 வயது இளைஞர்களுக்கே கண்புரை நோய் வருகிறது.

 கண்புரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் அழுத்தமாகி விடும். ரத்த கசிவும் இருக்கும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும். லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிய பிறகு அறுவை சிகிச்சை செய்தாலும் முற்றிலுமாக பார்வை திறன் கிடைக்குமா என்பது சந்தேகம்’ என்றார்.

 கண் தொழில்நுட்ப உதவியாளர் மேகலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பெண் சுகாதார மேற்பார்வையாளர் முத்து லட்சுமி தலைமையில் கிராமப்புற செவிலியர்கள், உதவி ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

முதியவர் மாயம்

Related Stories: