24 ஊழியர்களுக்கு ₹37 கோடி சம்பளம்

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரியின் பழமையான ஏஎப்டி மில் தானே புயலின்போது ரூ.18.45 கோடி சேதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி மூடப்பட்டது. அன்று முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, கோடி கணக்கில் முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

மில்லில் ஊழியர்கள் யாரும் பணிபுரியாத நிலையில், அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கிய விவகாரம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் 8.5.2012 அன்று வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, ஊழியர்களுக்கு லே-ஆப் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

 இதுகுறித்து மீண்டும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெறப்பட்டது. அதில், கடந்த 5.11.2013 முதல் 2018ம் ஆண்டு ஜூலை வரை 524 ஊழியர்களுக்கு லே-ஆப் அடிப்படையில் மாதம் 51 லட்சத்து 95 ஆயிரத்து 148 ரூபாய் என ரூ.37 கோடி ஊதியம் அளித்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

புதுவை அரசு தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், ஏஎப்டி மில் ஊழியர்களுக்கு இன்னும் லே-ஆப் அடிப்படையில் ஊதியம் வழங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதுதொடர்பாக ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறுகையில், புதுவையில்

பொது நிறுவனங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியமே அளிக்காத நிலையில், ஏஎப்டி மில் ஊழியர்களுக்கு மட்டும் லே-ஆப் என்ற அப்படையில் ரூ.37 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது பாரபட்சத்தை காட்டுகிறது.

இந்த ஊழியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்காமல் லே-ஆப் அடிப்படையில் ஆண்டு கணக்கில் ஊதியம் அளித்து வருவதால் அரசு நிதி கோடி கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கவர்னர் கிரண்பேடியிடம் புகார் அளித்துள்ளோம். ஏஎப்டி மில்லை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்து, அரசின் நிதி வீணடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: