வீரவணக்க நாள் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

அரியலூர்,அக்,12: அரியலூரில் நடந்த வீரவணக்க நாள் விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை அரியலூர் எஸ்பி வழங்கினார். இந்திய அளவில் காவல் துறை, ஆயுதப்படை மற்றும் பாதுகாவல் படைகளில் பணிபுரியும் போது வீரதீர செயல்கள் புரிந்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம்  செலுத்தும் நிகழ்ச்சி காவல் துறையினரால் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 21ம்  தேதி  அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வீரமரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் காவல் இணைய தளத்தில் பல தகவல் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் காவல்துறையினரால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவு கூர்ந்து அவர்களை போற்றும் விதமாக விவாத போட்டி மற்றும் வினாடி-வினா போன்ற நிகழ்ச்சிகள் அரியலூர் மாவட்ட எஸ்பி அபினவ் குமார், உத்தரவின் பேரில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களை கவவுரவிக்கும் வகையில்  எஸ்பி அபினவ் குமார்,  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சிக்கு  அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி, டிஎஸ்பி (பயிற்சி) மேகலா, தனிப்பிரிவு ஆய்வாளர் மற்றும் காவல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.

Related Stories: