மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முகாம்

காளையார்கோவில், அக்.12:  காளையார்கோவிலில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மற்றும் அளவீட்டு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராஞ்சனி தொடங்கி வைத்தார். முகாமில் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 16 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை, 41 நபர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை, 41 நபர்களுக்கு இலவச ரயில்  பயண அட்டை வழங்கப்பட்டது.

முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் ஜோசப் ஆன்டோரெக்ஸ், சகாயசெல்வன் மற்றும் இந்திராணி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) புளோரா, திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் பாண்டீஸ்வரி, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: