தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு சிறப்பு பேருந்து விழாக்குழு கோரிக்கை

மார்த்தாண்டம், அக்.11 : மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவர் கோயிலை ஒட்டிய தாமிரபரணி தீர்த்தப் படித்துறையில் புஷ்கர விழா நாளை துவங்கி 23ம்தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு வாய்ந்த இந்த விழா தற்போது குமரி மாவட்டத்தில் திக்குறிச்சியில் மட்டுமே நடக்கிறது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் நீராடி செல்வார்கள் என கருதப்படுகிறது.  மேலும் அக். 22ம் தேதி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், இறையன்பர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதிக்கு மகா ஆரத்தி உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்கள்.  ஆகவே 22ம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை சார்பில் அடிப்படை வசதி செய்ய வேண்டும்.  இவ் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக குமரி மாவட்டத்தி–்ன் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், திருவனந்தபுரத்திலிருந்தும் திக்குறிச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என  திக்குறிச்சி மகா புஷ்கர விழா குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Related Stories: