பண்ருட்டியில் ஹஜரத் நூர்முகமதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

பண்ருட்டி, அக். 10: பண்ருட்டி காந்தி ரோட்டில் ஹஜரத் நூர்முகமதுஷா அவுலியா தர்காவில் உருஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உற்சவம் துவங்கப்பட்டு வாணவேடிக்கையுடன் தலைவர் தாஜூதீன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் ஜமாத்தார்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். நேற்று முன்தினம் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.சி.சம்பத், வக்புவாரிய தலைவர் அன்வர்ராஜா, முன்னாள் தலைவர் தமிழ்மகன்உசேன், வாரிய உறுப்பினர்கள் எம்எல்ஏ அபுபக்கர், சையத்அலிஅக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சந்தனக்கூடு தர்காவின் உள் வளாகத்திலேயே சுற்றி வந்தது. இதில் கண்காணிப்பாளர் லியாகத்அலி, ஆய்வாளர் அன்வர்தீன், பொருளாளர் ஷேக்பாஷித், நிர்வாக குழு உறுப்பினர் ஷர்மிளா, நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

Related Stories: