கேளம்பாக்கம் தனபாலன் கலைக்கல்லூரியில் ஓவிய புகைப்பட குறும்பட போட்டி: இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பங்கேற்பு

திருப்போரூர். அக்.10: கேளம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையின் (விஷூவல் கம்யூனிகேஷன்) கீழ் லைம்லைட் 2018 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிர்வாக செயலர் புகழேந்தி தனபாலன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் குழல் மொழியாள் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சென்னை நுண்கலைக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார், புனே இண்டி டிசைன்  நிறுவன இயக்குனர் சுதிர் சர்மா, பெங்களூர் ஸ்பெர்ட் நிறுவன இயக்குனர் சோனியா மன்சந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 200 மாணவர்கள் தங்களது குறும்படம், புகைப்படம் மற்றும் ஓவியங்களை காட்சிப்படுத்தினர். இவற்றில் சிறந்ததாக 3 தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் ஸ்ரீதேவி புகழேந்தி செய்தார்.

Related Stories: