கடகுளம் புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

திசையன்விளை, அக். 9: கட குளம் புனித ராஜகன்னி மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.  ஆலயத்தில் பணகுடி பங்குத்தந்தை நெல்சன் தலைமையில் நடந்த கொடியேற்ற விழாவில் தனியார் டிவி தென்மண்டல பொறுப்பாளர் ஜெரால்டுரவி மறையுரை நிகழ்த்தினார். கல்கத்தா உயர் மறைமாவட்டத்தில் பணி செய்யும் பெப்பின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். மாலை தட்டார்மடம் பங்குத்தந்தை சந்தியாகு தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை பல்வேறு சபைகள், அன்பியங்கள் சார்பில் திருப்பலி, மாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 13ம் தேதி 9ம் திருவிழா அன்று காலை சாத்தான்குளம் மேரி இம்மாக்குலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. மாலை 4 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 8 மணிக்கு திசையன்விளை திருத்தல அதிபர் பன்னீர் செல்வம் தலைமையில், அணைக்கரை திருத்தல அதிபர் ஜோசப் ஸ்டாலின் மறையுரையுடன் பெருவிழா மாலை ஆராதனையும் நடக்கிறது.

மறுநாள் (14ம் தேதி) காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், 11 மணிக்கு திருமுழுக்கும், மாலை 5 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிராக்றஸ், ஊர் நிர்வாக கமிட்டி, இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: