அரியலூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 347 மனுக்கள் குவிந்தன

அரியலூர்,அக். 9: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 347 மனுக்கள் பெறப்பட்டன.அரியலூர்  கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி, தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 347 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 42 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதி உதவியாக தலா ஒரு குழுந்தைக்கு மாதம் ரூ.2000 வீதம்  12 மதங்களுக்கு 42 குழந்தைகளுக்கும் மொத்தம் ரூ.9,84,000க்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: