குளத்தூரில் கபடி போட்டி பரிசளிப்பு விழா

குளத்தூர்,அக்.9: குளத்தூரில் நடந்த கபடி போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் பூங்குளத்தான் அணி முதல் பரிசு வென்றது.குளத்தூர் அபிமன்யூ கபடி குழுவின் 7ம் ஆண்டு ஆண்களுக்கான கபடி போட்டி  முத்துமாலையம்மன் கோயில் மைதானத்தில் நடந்தது. இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 30அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முதல் இடம் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் பூங்குளத்தான் ஏனாதி அணியினருக்கு முதல் பரிசு ரூ20ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த குளத்தூர் அபிமன்யூ அணியினருக்கு பரிசு ரூ15ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த ஆப்பனுர் ஏபிஆர் அணி மற்றும் பொட்டல்காடு உத்தண்டு அணியினருக்கும் தலா ரூ10ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. கால்இறுதியில் வெற்றிவாய்ப்பை இழந்த நான்கு அணிகளுக்கும் தலா ரூ4ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அபிமன்யூ கபடிகுழுவினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: