மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி,  செப். 26:  மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற மாற்றுத் திறனாளி  மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக நலத்துறை அறிவித்துள்ளது. புதுவை சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-மத்திய அரசு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி, மேல்  கல்விகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு  உள்ளது. 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல் ஊனம் கொண்ட மாற்றுத் திறனாளிகளின்  உயர்கல்விக்கு உதவுவதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 9ம்  வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில்  பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தக்க சான்றுகளுடன் விண்ணப்பித்து இந்த  உதவித் தொகையை பெறலாம். தகுதியான மாற்றுத் திறனாளி மாணவர்கள்  www.scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு  அதில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: