கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் திமுகவினர் மும்முரம்

கும்பகோணம், செப். 25:  கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்த்து ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கடந்த 9, 23ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான பணிகள் செய்யப்பட்டது. இதுபோல் வரும் அக்டோபர் 7, 14ம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்நிலையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நகர செயலாளர் தமிழழகன் மற்றும் நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்து வருகிறது. கும்பகோணம் நகராட்சியில் திமுக சார்பில் 20 வாக்காளர்களுக்கு ஒரு முகவர் நியமித்து அவரிடம் உள்ள வாக்காளர் பெயர் பட்டியலை சரி பார்த்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர் ஆய்வு பணி நகராட்சி 10வது வார்டில் இருந்து துவங்கப்பட்டது.

Related Stories: