சித்தேரி வாய்க்காலை தூர்வார தனியார் பல்கலை ₹6 லட்சம் நிதி

புதுச்சேரி, செப். 25:  புதுச்சேரி நீர்வளப் பணி என்னும் தலைப்பில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சித்தேரி பிரதான கால்வாயை கவர்னர் கிரண்பேடி நேற்று ஆய்வு செய்தார்.  புதுவையில் 25 பாசன கால்வாய்களை சீரமைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கி ஊரக வேலைவாய்ப்பு முகமைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதில் சித்தேரி பிரதான கால்வாயும் ஒன்று. சுமார் 7 கி.மீ. நீளமுள்ள இந்த கால்வாய் 8 குளங்களுக்கு தண்ணீரை வழங்குகிறது. பங்காரு கால்வாயுடன் சேர்ந்து புதுவையில் நெற்களஞ்சியமான பாகூரை சித்தேரி கால்வாய் வளப்படுத்துகிறது.  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இந்த கால்வாயை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  சமுதாய பங்களிப்புத் திட்டத்தின்கீழ் இதை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.  கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டதை போல ஏரிக்கரை சங்க உறுப்பினர்களை கொண்டு இந்த வாய்க்கால் தூர்வார ஆளுநர் முடிவு எடுத்துள்ளார்.

 இதுதொடர்பாக நேற்று கவர்னர் கிரண்பேடி டிவிட்டர் பதிவில் கூறி

யிருப்பதாவது: சித்தேரி வாய்க்காலில் 7 கி.மீ. நீளம் வரை தூர்வாரும் பணிக்காக ரூ.6 லட்சம் நிதி தேவைப்பட்டது. ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் தூர்வாரியதற்கான நிதியை அரசு நிதி ஒதுக்கி தராத சூழலும் இருந்தது. அதனால் நிதி கோரி ஆளுநர் வலியுறுத்தி வந்தார். பொதுப்பணித்துறை கால்வாய்களை அடையாளம் கண்டு தந்தால் அதற்கான நிதியை கொடையாளர் நேரடியாக ஒப்பந்ததாரர்களிடம் தர அறிவுறுத்தினார். இதன்மூலம் கொடையாளருக்கும், ஜேசிபி ஒப்பந்ததாரருக்கும் இடையேதான் உண்மையில் ஒப்பந்தம் நிகழ்கிறது. சித்தேரி வாய்க்காலுக்கு தூர்வார ரூ. 6 லட்சம் நிதி தேவைப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்களிடம் அரசு மூலம் விட்டால் கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இருமடங்கு நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். கொடையாளர்கள் ராஜ்நிவாஸை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தோம். தற்போது சத்யபாமா பல்கலைக்கழகம் சித்தேரியை தூர்வார ரூ. 6 லட்சம் நிதி தருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இதனை அவர்கள் நேரடியாக ஒப்பந்ததாரர்களிடம் தருவதாக  உறுதி தந்துள்ளனர். இவ்வாறு டிவிட்டர் பதிவில் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: