எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

நெல்லை, செப்.25:  பாவூர்சத்திரம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9வது ஆண்டு விளையாட்டு விழா போட்டிகள் நடந்தது.விழாவிற்கு பள்ளித் தாளாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். முதல்வர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார் அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார் வரவேற்றார். ஆலங்குளம் டிஎஸ்பி ரமேஷ் பள்ளி கொடியேற்றி வெண் புறா பறக்க விட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் அப்துல்கலாம், ராமானுஜம், ஜெகதீஷ் சந்திரபோஸ், சர்சிவி ராமன் என நான்கு அணிகளாக களம் புகுந்தனர். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தரமான கல்வியை புரிதலோடு பயணித்தால் எதிர்காலத்தில் நல்ல இருக்கை அடையாளமாக அமையும் என்பதை நாற்காலியுடன் மெகா அணிவகுப்பு நடத்தினர். முதல் வகுப்பிற்கு கொடி சேகரித்தல், இரண்டாவது வகுப்பிற்கு குழு போட்டி, மூன்றாவது வகுப்பிற்கு கங்காரு போட்டி, நான்காம் வகுப்பிற்கு ரிங்பாலை தலையில் வைத்து சரிவின்றி சமன்பாட்டோடு நடக்கும் போட்டி, 5ம் வகுப்பிற்கு வண்ண, வண்ண சாக்கு போட்டி, 10ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை மாணவர்கள் 100 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம், தடை ஓட்டத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். முடிவில் சுபாஷ் சந்திரபோஸ் அணி 126 புள்ளிகள் பெற்று முதலிடமும், சர்சிவி ராமன் அணி 116 புள்ளிகள் பெற்று 2வது இடமும், ராமானுஜம் அணி 109 புள்ளிகளுடன் 3வது இடமும், அப்துல்கலாம் அணி 83 புள்ளிகளுடன் கடைசி இடமும் பிடித்தது. முதலிடம் பெற்ற அணிக்கு டிஎஸ்பி ரமேஷ் வெற்றி கேடயம் வழங்கி பேசுகையில், வேலைவாய்ப்பிலும், உயர் கல்வியிலும் படிப்புக்கு இணையாக விளையாட்டிலும் வாய்ப்புகள் உள்ளன என்றார். விழா நிகழ்ச்சிகளை மாணவிகள் கோகிலவடிவு, வைஷ்ணவி, பிரசாந்தி, காருண்யாதேவி, பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உடற்பயிற்சி ஆசிரியர் தேவஜெகன், பிரமைரி நர்சரி ஒருங்கிணைப்பாளர் பாகிரதி, ஆசிரியை கலைச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: