அமராவதி அணையில் இருந்து ஆறு, கால்வாயில் தண்ணீர் திறப்பு

உடுமலை,செப்.21:உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை கடந்த 2 மாதமாக நிரம்பி உள்ளது. அணையில் 88 அடிக்கும் மேல் நீர்மட்டம் உள்ளது.

இதையடுத்து, பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, செப். 20ம் தேதி முதல் டிசம்பர் 4ம்தேதி வரை உரிய இடைவெளி விட்டு மொத்தம் 5,215 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி, அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக ஆற்றிலம், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாயிலும் நேற்று மதியம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.ஆற்றில் ஆயிரம் கனஅடியும், பிரதான கால்வாயில் 440 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பழைய 10 கால்வாய் பாசன பகுதியில்  21,867 ஏக்கரும், புதிய பாசன பகுதியில் 25,250 ஏக்கர் என மொத்தம் 47,117 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி செயற்பொறியாளர் சரவணன் (கரூர்), உதவி பொறியாளர்கள் பாபு சபரீஸ்வரன், பிரதான கால்வாய் பாசன சங்க தலைவர் பார்த்தசாரதி, செந்தில், வெங்கடேஷ் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories: