குப்பைகள் தேங்கி கிடந்தால் ஸ்வச்சதா ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்

புதுச்சேரி, செப். 21: புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சரிவர குப்பை அகற்றப்படவில்லையா? வாய்க்கால்களில் அடைப்பு உள்ளதா? குப்பை தொட்டி சுத்தம் செய்யப்படவில்லையா? ஏதேனும் இறந்த நாய், பூனை, மாடு போன்றவை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதா? உடனே தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய அரசால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள ஸ்வச்சதா ஆப் மூலம் உங்கள் புகார்களை நகராட்சிக்கு உங்களுடைய கைபேசியில் படம் பிடித்து அனுப்பி புகாரை பதிவு செய்யலாம்.

 மேற்சொன்ன ஸ்வச்சதா ஆப்-ஐ பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் swachhata - MoHUA - Janaagra என்கிற தலைப்பில் இருக்கும் புகைப்படம் எடுதது உடனடியாக அனுப்ப முடியும். மேலும், பதிவிறக்கம் செய்யும் முறையினை you tube-ல் puducherry municipality - Swachhata app download procedure என்ற தலைப்பில் தமிழில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: