மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வீரவநல்லூர், செப்.19:  மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல்,   டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு   துறைகளில் ஊழல் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்  சேரன்மகாதேவியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ பூங்கோதை, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆளும் அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும் தகுதியற்றவர்கள் பதவியில் இருப்பதால் மக்கள் அன்றாட வாழ்வில் வேதனைப்படுவதாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சித்திக், சரஸ்வதி நாராயணன், மகளிரணி ராஜம்ஜான், சங்குகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பாளை ஒன்றிய செயலாளர் கே.எஸ்.தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் போர்வெல் கணேசன், சிறுபான்மைபிரிவு ஜிந்தா, மாணவரணி ராமச்சந்திரன், மீனவரணி எரிக்ஜூடு, ஒன்றிய செயலாளர்கள் சேரன்மகாதேவி முத்துபாண்டி என்ற பிரபு, களக்காடு ராஜன், அம்பை பரணிசேகர், ஆலங்குளம் செல்லத்துரை, கடையம் குமார், நாங்குநேரி சுடலைக்கண்ணு, மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வகுமார், மாவட்ட இளைஞரணி வேல்முருகன், பேரூர் கழக செயலாளர்கள் சேரன்மகாதேவி சுடலையாண்டி, பத்தமடை காதர், மேலச்செவல் சுரேஷ் செல்வகுமார், கோபாலசமுத்திரம் முருகேசன், வீரவநல்லூர் அப்துல், கல்லிடைக்குறிச்சி இசக்கிபாண்டியன்,

வி.கே.புரம் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி செய்திருந்தார். இதேபோல் குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு   துறைகளில் ஊழலை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்  நெல்லை மத்திய மாவட்டம், மேற்கு மாவட்ட  திமுக சார்பில் நெல்லை சந்திப்பு  காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. மத்திய மாவட்ட  செயலாளர் அப்துல்வகாப், மேற்கு மாவட்ட செயலாளர்  சிவ.பத்மநாபன் ஆகியோர்  தலைமை வகித்தனர். நெல்லை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர்   கருப்பசாமிபாண்டியன், எம்எல்ஏக்கள் டிபிஎம் மைதீன்கான், ஏஎல்எஸ்  ெலட்சுமணன்,  முன்னாள் எம்.பி. தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்  மாநில  தீர்மானக்குழு உறுப்பினர் ப.ஆ. சரவணன், மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர்  கிரகாம்பெல், மாநில தகவல்  தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்   சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் துரைராஜ், மத்திய மாவட்ட   பொருளாளர் அருண்குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வக்கீல் துரை,   மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மத்திய மாவட்ட பொறியாளர் அணி  அமைப்பாளர்  அருள்வின் ரொட்ரிகோ, பகுதி செயலாளர்கள் நமச்சிவாயம், தச்சை  சுப்பிரமணியன்,  பூக்கடை அண்ணாத்துரை, அப்துல்கயூம், தலைமை செயற்குழு  உறுப்பினர் வின்சர்,  விவசாய அணி அமைப்பாளர் பொன்னையாபாண்டியன், மானூர்  ஒன்றிய செயலாளர்  அன்பழகன், விவசாய அணி துணை அமைப்பாளர் நடுவை நாராயணன்,  செங்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ரஹீம், மாவட்ட துணைசெயலாளர் ஆயான் நடராஜன், மாநில சிறுபான்மை பிரிவு ரசாக், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, செல்லத்துரை,

மாநில பேச்சாளர் இஸ்மாயில், நகர செயலாளர்கள் தென்காசி ரஹீம், கடையநல்லூர் சேகனா, மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, துணை அமைப்பாளர்கள் அழகுசுந்தரம், ஹக்கீம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் வெங்கடேசன், துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வளன்அரசு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், தொண்டரணி இசக்கிபாண்டியன், அற்புதராஜ், வக்கீல் வேலுச்சாமி, சாமித்துரை, வடகரை ராமர், முன்னாள் பொதுக்குழு  உறுப்பினர் செவல் அரிகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் அணி  துணை அமைப்பாளர்  தாழையூத்து கே.ஆர். ராஜூ, மாவட்ட இளைஞரணி துணை  அமைப்பாளர்கள் பி.எம்.  சரவணன், வக்கீல் கந்தசாமி, நடராஜன், முன்னாள் ஒன்றிய  செயலாளர் அருள்மணி,  முன்னாள் கவுன்சிலர்கள் கமாலுதீன்,

பிரான்சிஸ்,  எஸ்.வி.சுரேஷ், கந்தன்,  ராஜகுமாரி, சைபுன்னிசா, ராஜேஸ்வரி, மாவட்ட துணைச்  செயலாளர்கள் மலைகண்ணன்,  கிரிஜாகுமார், ஆதிதிராவிடர் நலக்குழு துணை  அமைப்பாளர் வருஷப்பத்து ரவி,  மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் சுப்பையா,  மாநகர இளைஞரணி அமைப்பாளர்  கருப்பசாமி கோட்டையப்பன், மேற்கு மாவட்ட  அவைத்தலைவர் முத்துபாண்டியன்,  முன்னாள் பகுதி செயலாளர் உலகநாதன், கவிஞர்  மூர்த்தி, பாளை பகுதி முன்னாள்  செயலாளர் மாரியப்பன், பாம்பே மாணிக்கம்,  எல்ஐசி பேச்சிமுத்து, மாநகர  பிரதிநிதி காசிமணி, சிறுபான்மை பிரிவு தீன், வட்டச் செயலாளர் நம்பிராஜன், நெல்லை மாநகர கலை இலக்கிய அணி  பகுத்தறி பேரவை துணைச் செயலாளர் மேகை  செல்வம், கோபாலகிருஷ்ணன், கார்டன்  சேகர், வண்ணை சேகர், சண்முகசுந்தரம்,  வக்கீல் மணி, புலிகண்ணன், தொமுச  கருப்பசாமி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்   பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டது.   தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளை மிரட்டி பணி மாறுதல் என்ற பெயரில் பணம்  பறித்து வருகின்றனர்.  அமைச்சர்கள் லஞ்சம், ஊழலில் திளைத்து வருகின்றனர்.  மத்திய, மாநில  அரசுகள் மக்களை பற்றி கவலைப்படவில்லை என்பதை கண்டித்து  திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நெல்லை  சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: