கடையநல்லூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீர்

கடையநல்லூர், செப்.18: இடைகால் ரயில்வே பாலம் பணிகள் முழுமையாக முடிவடையாத காரணத்தால் பாலமார்த்தாண்டபுரம் வழியாக போக்குவரத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  தென்காசி-கடையநல்லூர் சலையில் இடைகாலிலிருந்து பாலமார்த்தாண்டபுரம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் இருந்தது. இந்த ரயில்வே கேட் மற்றும் அதிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இடைகாலிலிருந்து ஊர்மேலழகியான் செல்லும் சாலையிலும் ஒரு ரயில்வே கேட் இருந்தது. இந்த இரண்டு கேட்டிற்கும் சேர்த்து ஒரு கேட் கீப்பர் பணியாற்றிவந்தார். இந்நிலையில் பாலமார்த்தாண்டபுரம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு தண்டவாளத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தனர். இந்த சுரங்கப்பாதையானது ஒரு பக்கம் சாலை மட்டத்திலும் மறு பக்கம் மிகவும் பள்ளத்திலும் உள்ளது. மேலும் பாலம் அமைத்ததுடன் சாலை அமைக்காமல் விட்டுவிட்டனர்.

இதனால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு வருஷமாக இதே நிலை நீடிக்கிறது. பள்ளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் மின் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறையும் பாலத்தின் சுரங்கப்பாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: