இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, செப். 12: புதுச்சேரி

யில் வாட்டி வதைக்கும் வரி உயர்வுகளை திரும்பப் பெறக் கோரியும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு சார்பில் பாக்கமுயான்பட்டு கொக்கு பார்க் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் ஹேமலதா, எழிலன், தனஞ்செழியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் கட்டணம், மின் கட்டண உயர்வை குறைத்திட வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் எரியாமல் உள்ள ைஹமாஸ் விளக்கு, சோடியம் விளக்கு உள்ளிட்ட தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். கொட்டுப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அறிவித்தபடி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ராஜீவ்காந்தி சிலை அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: