சர்க்கரை ஆலை தொழிலாளர் உள்ளிருப்பு போராட்டம்

உடுமலை, செப். 11: உடுமலை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடுமலை  அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.  இங்கு  பணியாற்றும் தொழிலாளர்கள் சம்பள நிலுவை தொகை வழங்க கோரி போராட்டம் நடத்தி  வருகின்றனர். லாரிகள் சிறைபிடிப்பு, கருப்பு பேட்ஜ் அணிந்து  ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். ஆலை வளாகத்தில்  உண்ணாவிரதமும் இருந்தனர். இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: