கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி

ராஜபாளையம், ஆக. 14:  தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தலைவர் உள்ளிட்ட இயக்குநர் பதவிகளில் அதிமுகவினர் வெற்றி பெற்று வருகின்றனர். இதனால், அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ராஜபாளையம் அருகே, முதுகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 35 பேர் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் தேர்தல் அலுவலர் அழகுமலையிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். புதிய தமிழகம் மற்றும் அதிமுகவினர் போட்டியில்லாமல் 11 இயக்குநர் மற்றும் தலைவரை தேர்ந்தெடுக்க வியூகம் அமைத்தனர்.

ஆனால், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ராஜாலிங்க ராஜா தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் தேர்வு செய்யப்பட்டார். புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 7 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 4 பேரும் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்று வரும் நிலையில், முதுகுடியில் புதிய தமிழகம் தலைவர் பதவியை கைப்பற்றியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories: