கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளரும், தேவராஜ் குரூப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மதியழகன் பிறந்த நாள் வரும் 16ம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. விழாவினை மாவட்ட இணை செயலாளர்கள் கே.வி.எஸ்.சீனிவாசன், எஸ்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலும், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்ஆர் முத்து முன்னிலையில் நடைபெற உள்ளது. பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் ஸ்ரீராகவேந்திரர் கோயில், பெருமாள்கோயில், நரசிம்மன்கோயில், கிரிஜாம்பாள்கோயில், பெரிய மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம், ஏழைகளுக்கு வேஷ்டி, சேலை, மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.