தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் வரலாறு, பொருளியல் ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும்

நாமக்கல், ஆக. 14: தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரலாறு, பொருளியல் ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என முதுகலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 95உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கிராமப் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 15 மாணவரும், நகர் பகுதி பள்ளிகளில் 30 பேரும் கலைப்பிரிவில் சேர்ந்தால் தான் பொருளியல், வரலாறு, வணிகவியல் பாட ஆசிரியர் பணியிடங்கள் 2ம் கட்டமாக தோற்றுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பொருளியல், வரலாறு, வணிகவியல் பட்டதாரிகள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: