கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 14: புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசின் திட்டமான புதுச்சேரி யூனியன் பிரதேச குழந்தைகள் பாதுகாப்பு சொசைட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 18 ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில் உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, இயலாமையால் உள்ள குழந்தைகளை பராமரித்து வரும் அரசு இல்லங்களில் பணி அமர்த்தப்பட்ட 22 ஊழியர்கள் கடந்த ஜூலை 31ம் தேதி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதோடு, புதிய ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணி அமர்த்துவதற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பணிநீக்க ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், பணிநீட்டிப்பு ஆணையை பிறப்பிக்க வலியுறுத்தியும் புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு சொசைட்டி ஊழியர் சங்கத்தினர் தந்தை பெரியார் நகரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார். பிரேமதாசன் முன்னிலை வகித்தார். ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், சேகர், ஜெயக்குமார், அருணகிரி, வாசுதேவன், சங்கர்தாஸ், சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: